மறைந்த பாடகி ஆஷா போஸ்லேக்கு மக்களவையில் இரங்கல்

இன்று நாடாளுமனத்திலும் ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த பாடகி ஆஷா போஸ்லேக்கு மக்களவையில் இரங்கல்
Published on

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே கடந்த 11-ம் தேதி தீவிர சோர்வு மற்றும் மார்பகத் தொற்று காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே கடந்த 12 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 92. ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக ஆஷா போஸ்லே மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com