பிரியாவின் உடையில் இருந்த வாசகத்தால் எழுந்த சர்ச்சை... விமர்சனங்களுக்கு அட்லீ பதிலடி

ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பிரியா அணிந்திருந்த உடையில் ‘ஆனந்தின் ஆதரவாளர்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
பிரியாவின்  உடையில் இருந்த வாசகத்தால் எழுந்த சர்ச்சை...  விமர்சனங்களுக்கு அட்லீ பதிலடி
Published on: 

சென்னை,

இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பேசுவோர் பேசட்டும், விமர்சிப்போர் விமர்சிக்கட்டும். என விமர்சனங்களுக்கு அட்லீ பதிலடி கொடுத்துள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமண விழாவில் அட்லீ

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் பங்கேற்றார். அப்போது பிரியா அணிந்திருந்த உடையில் ‘ஆனந்தின் ஆதரவாளர்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதுடன், பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

விமர்சனங்களுக்கு அட்லீ பதில்

இந்த விவகாரம் குறித்து தற்போது இயக்குநர் அட்லீ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த விஷயத்தில் சொல்வதற்கு எதுவுமே இல்லை. நான் கருப்பாக இருக்கிறேன், சுமாராகத்தான் இருக்கிறேன் என்பது விமர்சிப்பவர்களின் அபிப்ராயம். ஆனால், என்னை 4 படங்களில் ஹீரோவாக நடிக்க அழைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்களை என்னவென்று சொல்வது? இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை” என்றார்.

“ஆனந்த் அம்பானி என் நண்பன்”

மேலும் ஆனந்த் அம்பானியுடனான தனது நட்பு குறித்துப் பேசிய அட்லீ, “ஆனந்த் அம்பானி என் நண்பன். மும்பையில் என் கைபிடித்து அழைத்துச் சென்ற நண்பன். இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றும். அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பேசுவோர் பேசட்டும், விமர்சிப்போர் விமர்சிக்கட்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்போதுமே என் பதில் என் படங்களாகவே இருந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com