காதலியை கரம்பிடித்த “குக் வித் கோமாளி” அஸ்வின்

மணப்பெண் புவனேஸ்வரி ரஜினி, கமல் உள்ளிட்டோரை இயக்கிய இயக்குநர் ராஜசேகரின் பேத்தி ஆவார்.
காதலியை கரம்பிடித்த “குக் வித் கோமாளி” அஸ்வின்
Published on: 

கோவையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அஸ்வினின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் கவனம் ஈர்த்தவர் அஸ்வின். ஆல்பம் பாடல்கள் இவரை இளைஞிகள் இடையே பிரபலமாகியது.என்ன சொல்லப்போகிறாய், செம்பி, ஹாட் ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில்தான், கோவையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அஸ்வினின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

நேற்று வரை அஸ்வின் திருமணம் பற்றிய எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், தற்போது அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது காதல் திருமணம் என்றும் தெரிய வந்துள்ளது. இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகவே திருமணம் நடந்துள்ளது.

மணப்பெண் பெயர் புவனேஸ்வரி என்பதும், அவரும் திரைப்படத்தைச் சேர்ந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. புவனேஸ்வரி, ரஜினி, கமல் உள்ளிட்டோரை இயக்கிய இயக்குநர் ராஜசேகரின் பேத்தியாம். நீண்ட நாள் காதலியை இன்று மணமுடித்துள்ளார் அஸ்வின். அவருக்கு ஏராளமானோர் தங்களுடைய வாழ்த்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

X