சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்'

சர்வதேச திரைப்பட விழாவில் 'கட்டில்'

கட்டில் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
Published on

கட்டில் என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சிருஷ்டி டாங்கே நாயகியாகவும், டைரக்டர் பாலசந்தர் மருமகள் கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், நிதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது, ''மராட்டிய மாநில அரசு சார்பில் புனேயில் நடைபெறும் 19-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக கட்டில் படம் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட விழாவில் 2 தடவை கட்டில் படத்தை திரையிட உள்ளனர். தொடர்ந்து மும்பை, லாத்தூர், நாக்பூர் திரைப்பட விழாக்களிலும் கட்டில் படம் திரையிடப்பட உள்ளது. 3 தலைமுறையாக பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வரும் ஒரு கட்டிலை பற்றிய கதையே இந்த படம். குடும்ப உறவுகளை பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக தயாராகி உள்ளது'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com