10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகளை தேடும் மாதவன்?

இந்தியில் 'பிரிட்ஜ்' என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் மாதவனும் ராஷி கன்னாவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் காணாமல் போன தனது மகளை மாதவன் இன்னும் தேடி வருகிறார். ஆனால் இது நிஜ வாழ்க்கையில் அல்ல...திரைப்படத்தில். இந்தியில் 'பிரிட்ஜ்' என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் மாதவனும் ராஷி கன்னாவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மாதவனும் ராஷி கன்னாவும் கணவன் மனைவியாக நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாகவும், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
10 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் காணாமல் போன தங்கள் மகளைக் கண்டுபிடிக்க ஒரு தம்பதியினர் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியது இந்தப் படம் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story






