"உதயம் திரைவளாகம் மூடப்படுகிறது... என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன" - வைரமுத்து உருக்கம்

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
"உதயம் திரைவளாகம் மூடப்படுகிறது... என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன" - வைரமுத்து உருக்கம்
Published on

சென்னை,

கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது . முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் , ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.

மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது. இனிஅந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும் . நன்றி உதயம். என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com