

சென்னை,
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு 2027-க்கான இணையவழிப் பதிவு நேற்று (ஏப்ரல் 1-ந்தேதி) உடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த பதிவு காலம் வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பதிவு காலம் கடந்த பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரையாகும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.250 தேர்வு கட்டணமாகச் செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் வாயிலாகச் செலுத்தலாம்.
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை இணையவழிப் பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.) மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை உள்ளடக்கியதாகும். விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விரிவான தகுதி வரம்புகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை தவறாமல் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சென்னை ஆட்சேர்ப்பு அலுவலகத் தலைமையகத்தை (தொலைபேசி எண்: 044-2567 4924) தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.