புதிய சாதனை படைத்த 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம்.. உலக அளவில் ரூ.8,000 கோடி வசூல்!

'டெட்பூல் & வோல்வரின்' படம் உலகளவில் வெளியாகி, உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.
புதிய சாதனை படைத்த 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம்.. உலக அளவில் ரூ.8,000 கோடி வசூல்!
Published on

மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இணையாக வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது, வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை ஒன்றிணைத்து 'டெட்பூல் & வோல்வரின்' என்ற படம் உருவாகியுள்ளது. இது இதற்கு முன்னதாக வந்த டெட்பூல் மற்றும் டெட்பூல் 2 ஆகிய படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 26-ந் தேதி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.115.50 கோடி வசூலித்துள்ளது.

இந்தநிலையில், 'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது. ரியான் ரெனால்ட் மற்றும் ஹக் ஜேக்மேன் நடித்துள்ள இப்படம் ரூ.8000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது. இது 2024-ம் ஆண்டில் வெளியான படங்களில் ஆரம்பத்திலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தநிலையில், 'டெட்பூல் & வோல்வரின்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துள்ளது.அதன்படி, இந்தியாவில் அதிகம் வசூலித்த மார்வெல் படங்களின் டாப் 5 பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறது. இதற்கு முன்னதாக 5-வது இடத்தில் இருந்த தோர்: லவ் அண்ட் தண்டரை முந்தி 'டெட்பூல் & வோல்வரின்' இந்த சாதனையை படைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com