பிரபல பட அதிபர் மரணம்

மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணம் அடைந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேருவும் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்தார்.
பிரபல பட அதிபர் மரணம்
Published on

மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணம் அடைந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேருவும் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்தார். இவர் கல்யாண் ராம் நாயகனாக நடித்த 118 படம் மூலம் தயாரிப்பாளரானார். கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா மற்றும் போலீஸ் வாரி ஹெச்சரிகா, 118, திம்மரசு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவரது தயாரிப்பில் அல்லரி நரேஷ் நடித்துள்ள சபகு நமஸ்காரம் படம் சமீபத்தில் வெளியானது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வினியோகம் செய்துள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றினார். மகேஷ் கொனேரு மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com