நடிகர் சல்மான்கான் உறவினருக்கு கொலை மிரட்டல்

சல்மான்கான் உறவினருக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சல்மான்கான் உறவினருக்கு கொலை மிரட்டல்
Published on

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள இந்தி நடிகர் சல்மான்கான் வீட் டின் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது வீட்டில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த வாரம் ஜூகுவில் உள்ள இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டின் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியிலும் லாரான்ஸ் பிஷ் னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்க ளுக்கு முன் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நடிகர் சல்மான்கானின் மைத்துனரும், நடிகருமான ஆயுஷ் சர்மாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே சல்மான்கான் உறவினருக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com