

பாலிவுட் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், பூமி பட்னேகர். சினிமா தாண்டி தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் சினிமா பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன.
அதாவது, "சினிமாவில் பெண்களை மையப்படுத்தும் கதைகள் குறைந்து வருகின்றன. சமீபகாலமாகவே ஹீரோக்களை மையப்படுத்தியே அதிரடி, ஆக்ஷனில் சினிமா பாதை செல்கிறது. இது கவலை அளிக்கிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை.
அதேவேளை ஓ.டி.டி. தளங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அதிக வாய்ப்புகள் நடிகைகளுக்கு கிடைக்கிறது. திறமை இருந்தும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு ஓ.டி.டி. தளம் சரியான மேடை. சினிமாவில் தொடரும் இந்த நிலை மாறவேண்டும். நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் படைக்கப்பட வேண்டும். அவை அங்கீகரிக்கப்படவும் வேண்டும்", என்று பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.