18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் வெளியாகும் 'தாம் தூம்'

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் வெளியாகும் 'தாம் தூம்'
Published on

சென்னை,

அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமல்ஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் சிலம்பாட்டம் போன்ற திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியது.

இந்த வரிசையில், ரவிமோகன் நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படம் 'தாம் தூம்' ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ தரத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com