தர்ஷன் கணேசனின் “லெனின் பாண்டியன்” படத்தின் 3வது பாடல் அப்டேட்

தர்ஷன் கணேசனின் ‘லெனின் பாண்டியன்’ படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
தர்ஷன் கணேசனின் “லெனின் பாண்டியன்” படத்தின் 3வது பாடல் அப்டேட்
Published on

தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’.

பிரபலங்கள் நடித்துள்ள படம்

இப்படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு

சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது.

சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படம், தர்ஷன் கணேசனை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறது. சிவாஜி கணேசனின் பேரன் என்பதால், அவரது அறிமுகப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இளையராஜா இசையில் பாடல்கள்

‘உன்னை நம்பி’ எனத்தொடங்கும் பர்ஸ்ட் சிங்கிளை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். ‘சர்க்காரே சொல்லிருச்சு’ எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை எஸ். பி. சரண், முகேஷ் முகமது இணைந்து பாடியிருந்தனர்.

பாண்டி முனி வருகை’

இந்நிலையில், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘பாண்டி முனி வருகை’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படமானது வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com