மகன்களுடன் அண்ணாமலையாரை தரிசித்த தனுஷ்... கோ-பூஜையிலும் பங்கேற்பு

தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
மகன்களுடன் அண்ணாமலையாரை தரிசித்த தனுஷ்... கோ-பூஜையிலும் பங்கேற்பு
Published on

திருவண்ணாமலை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் இடையே, தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

'ஓம்' படப்பிடிப்பு விறுவிறுப்பு

சமீபத்தில் வெளியான 'கர' திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் 'ஓம்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். 'அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில், மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம்

படப்பிடிப்புக்கு இடையே நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் நடைபெற்ற கோ-பூஜையிலும் அவர் பக்தியுடன் கலந்து கொண்டார்.

ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

தனுஷ் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவரை நேரில் காணவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் கோயில் வளாகம் மற்றும் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com