ரீ- ரிலீஸாகும் தனுஷின் “3”

தனுஷின் ‘3’ திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி தெலுங்கில் ரீ- ரிலீஸாகிறது.
ரீ- ரிலீஸாகும் தனுஷின் “3”
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்3. 2012ம் ஆண்டில் தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழை போலவே, 3 திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்து தனுஷ் பாடிய கொலவெறி டி என்ற வைரல் பாடல், படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இப்படத்தில் சுருதி ஹாசன், பிரபு மற்றும் கேப்ரியெல்லா நடித்திருந்தனர்.

தனுஷின் 3 திரைப்படம் ஏற்கனவே செப்டம்பர் 2024ல் தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இப்படம் 2022ல் தெலுங்கில் ரீ- ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 3 திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ- ரிலீஸாகிறது. இன்னும் 50 நாட்களில் இத்திரைப்படம் ரீ- ரிலீஸ் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

View this post on Instagram

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com