தனுஷின் “ஓம்” திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியீடு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் தனுஷ், மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தனுஷின் “ஓம்” திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியீடு
Published on: 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், இதுவரை 'தனுஷ் 55' என்ற தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘ஓம்’

இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வைரல்

தனுஷின் பிறந்தநாளையொட்டி ‘ஓம்’ படத்தின்‘அலாக்கா லோவா’ என பெயரிடப்பட்ட முதல் பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது.

மம்முட்டியின் 75வது பிறந்த நாளையொட்டி ‘ஓம்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

படத்தின் புதிய ரிலீஸ் அறிவிப்பு

‘ஓம்’ படம் அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. பின்னர் ரஜினியின் ‘ஜெயிலர் 2’, சூர்யாவின் ‘சீன்’ படங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘ஓம்’ படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com