தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படம் டிசம்பரில் வெளியாகிறது..?

'வாத்தி' திரைப்படத்தை வருகிற டிசம்பர் 9-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படம் டிசம்பரில் வெளியாகிறது..?
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார். 'வாத்தி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் தனுசின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'வாத்தி' திரைப்படத்தை வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com