மும்பை அருகே ரூ.25 கோடிக்கு நிலம் வாங்கிய நடிகர் யாஷ்?

இந்த சொத்து யாஷ் மற்றும் அவரது மனைவிபெயரில் கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Actor Yash
Published on

மும்பை,

'கேஜிஎப்' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர் தற்போது 'டாக்சிக்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், 'ராமாயணா' படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாதர். தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், மும்பை அருகே உள்ள அலிபாக் கடலோரப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலிபாக் தாலுகாவுக்கு உட்பட்ட கமத் கிராமத்தின் கிஹிம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுமார் 5,200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தில் ஒரு வீடும் இருப்பதாக கூறப்படுகிறது. நிலத்தின் கிழக்குப் பகுதியில் கிராமப்புறச் சாலையும், மேற்குப் பகுதியில் கடலும் அமைந்துள்ளதால் அதன் மதிப்பு அதிகமாக இருப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சொத்து நடிகர் யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் பெயரில் கடந்த மே மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் தனது பயணத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், யாஷின் இந்த முதலீடு திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com