முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் நடிப்பது கடினமாக இருந்தது - நடிகர் பங்கஜ் திரிபாதி

படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் நடிப்பது கடினமாக இருந்தது என நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல் நடிப்பது கடினமாக இருந்தது - நடிகர் பங்கஜ் திரிபாதி
Published on

மும்பை,

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி உள்ளது. இதில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பங்கஜ் திரிபாதி நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை மூன்று முறை தேசிய விருது வென்ற ரவி ஜாதவ் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு 'மெயின் அடால் ஹோன்' என பெயரிட்டுள்ளனர். வினோத் பானுஷாலி, சந்தீப் சிங், சாம் கான் மற்றும் கமலேஷ் பானுஷாலி ஆகியோர் தயாரிக்கின்றனர். படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த பயோபிக் படத்தில் நடிகர் பங்கஜ் திரிபாதி, வாஜ்பாயாக துல்லியமாக நடித்துள்ளார்.

தற்போது அவர் அளித்த பேட்டியில், "ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது கடினம். மக்கள் படம் பார்க்கும் போது, நடிகர் மிமிக்ரி செய்கிறாரா இல்லையா? அல்லது நடத்தை போன்ற நுணுக்கங்களை எவ்வாறு கையாளுகிறார்? என்று பார்க்கிறார்கள்.

இதுபோன்ற பொது வாழ்க்கையில் இருந்தவர்களின் கதாபாத்திரத்தில் நடிப்பது கடினமானது. படத்தில் அவரின் முக பாவனை போன்ற வெளிப்புற விஷயங்களை துல்லியமாக காட்டுவது அவசியம். அவரின் எண்ணங்கள் மற்றும் ஆளுமையைப் புரிந்துகொள்ளும்படி நடிப்பது அதைவிட முக்கியமானது." இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com