“ஜனநாயகன்” படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் அமீர்

அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
“ஜனநாயகன்” படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட இயக்குநர் அமீர்
Published on

கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜன. 9ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருந்தது.வெளிநாட்டில் மட்டுமே முன்பதிவில் சுமார் ரூ.60 கோடி வரைக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில், படத்திற்கான சான்றிதழ் அளிக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், இயக்குநர் அமீர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் ஒரு திரைப்படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் தடுத்துவிட்டால் அவர்களை தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணம் எவ்வளவு கேவலமானது. தமிழ்நாட்டில் அதிகாரத்தை யார் கையில் கொடுக்க வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள். அயோக்கிய அரசியல்வாதிகள் அல்ல என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com