இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி கூட்டணியில் புதிய படம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ராணா டகுபதி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி கூட்டணியில் புதிய படம்
Published on

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனமும் முதல்முறையாக ஒன்றாக இணைகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தை 2015ல் தொடங்கினார். இந்தத் தயாரிப்பில் பத்துக்கும் மேல்பட்ட படங்கள் உருவாகியுள்ளன.

நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தயாரிப்பு நிறுவனம் 2005ல் உருவாக்கப்பட்டது. இதில் 70-க்கும் மேல்பட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், இந்த இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் படத்தை யார் இயக்குகிறார்கள், நடிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடாமல், நாளை (மார்ச் 16) மதியம் 12.12 மணிக்கு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ‘போருக்கு நடுவில் திருமணம் நடைபெற்றது’ எனக் குறிப்பிட்டு துப்பாக்கி வைக்கப்பட்ட புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com