முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து

தமிழகம் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்குகிறது என்று முதல்-அமைச்சர் விஜய்யை இயக்குனர் ​நெல்சன் பாராட்டியுள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ​நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தமிழகம் நம்பிக்கையுடன் உங்களை எதிர்நோக்குகிறது. மனமார்ந்த நல்வாழ்த்துகள் முதல்வரே ” என்று பதிவிட்டுள்ளார். விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’ பட புகைப்படத்தை நெல்சன் பகிர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com