'லியோ' படத்திற்கு இயக்குநர் நெல்சன் வாழ்த்து!

'லியோ' படத்திற்கு இயக்குநர் நெல்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
'லியோ' படத்திற்கு இயக்குநர் நெல்சன் வாழ்த்து!
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் இன்று வெளியாகவுள்ளது. அதன்படி கேரளாவில் அதிகாலை 4 மணிக்கே வெளியான லியோ படம் தமிழகத்தில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் நெல்சன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், எனக்கு பிடித்த தளபதி விஜய்யின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். எனது நண்பர்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத் மற்றும் படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com