“கிஸ்” படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் நெல்சன்

சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“கிஸ்” படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் நெல்சன்
Published on

சென்னை,

சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். இவர் 'நட்புன்னா என்னானு தெரியுமா', 'லிப்ட்', 'டாடா' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவரது நடிப்பில் கிஸ் என்ற படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

பேண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்கள் வாரஇறுதி நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நேற்று வெளியாகி காதல், பேன்டசி, காமெடி என ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கவின் கதாப்பாத்திரத்தின் பெயர் நெல்சன். இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் தன் எக்ஸ் பக்கத்தில், கிஸ் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. என் நண்பர்களின் சூப்பர் ஹிட் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மாஸ்டர் சதீஷ், நடிகர் கவின், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட படக் குழுவுக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் அனிரூத் தன் எக்ஸ் பக்கத்தில், ``கிஸ் படத்துக்கான பெரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கவின் தன் எக்ஸ் பக்கத்தில், ``வார்த்தைக்கு வாயில்லை" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com