"லெவன்" படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட இயக்குனர்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கிய லெவன் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சென்னை,
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'லெவன்'. இந்தபடத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி நாயகியாக நடித்திருந்தார் . மேலும் ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் லெவன் படத்தின் மேக்கிங் வீடியோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






