அனைவரையும் மெய் மறக்க வைத்த திஷா பதானி

மும்பையில் நேற்று நடந்த பேஷன் ஷோவில் நடிகை திஷா பதானி பங்கேற்றார்.
அனைவரையும் மெய் மறக்க வைத்த திஷா பதானி
Published on

மும்பை,

பாலிவுட் சினிமாவில் வலம்வரும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் திஷா பதானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் இவர். கவர்ச்சியாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

தமிழில் கங்குவா, தெலுங்கில் கல்கி என தென்னிந்திய படங்களிலும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், திஷா பதானி மாடல் அழகியாகவும் கெரியரில் கலக்கி வருகிறார்.

இந்தநிலையில், நடிகை திஷா பதானி மும்பையில் அண்மையில் நடைபெற்ற லக்மே பேஷன் ஷோவில் கலந்து கொண்டார். மும்பையின் கிளாமர் உலகையே ஒன்று சேர்த்த இந்த பேஷன் ஷோவில் திஷா பதானி, தனது ஸ்டைலிஷ் லுக்கால் அனைவரையிம் மெய் மறக்க வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com