பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறேனா? சாக்ஷி அகர்வால் விளக்கம்

பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது. இதுகுறித்து நடிகை சாக்ஷி அகர்வால் பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறேனா? சாக்ஷி அகர்வால் விளக்கம்
Published on

தமிழில் ரஜினிகாந்துடன் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது. இதுகுறித்து சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''நான் தற்போது 'பஹிரா', 'நான் கடவுள் இல்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். 'கெஸ்ட்-சாப்டர் 2' எனும் திகில் கதையில் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாகவும், 'கந்தகோட்டை' படத்தை இயக்கிய சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இரண்டு மலையாள படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை. என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com