தம்பதிகளின் உறவை சீரழிக்கும் செல்போன்? காஜல் அகர்வால் எச்சரிக்கை

சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடு குறித்து காஜல் அகர்வால் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.


தம்பதிகளின் உறவை சீரழிக்கும் செல்போன்? காஜல் அகர்வால் எச்சரிக்கை
Published on

சென்னை,

தம்பதிகள் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தும்போதுகூட ஒருவரை ஒருவர் கவனிக்காமல், பேசிக்கொள்ளாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையேயான உரையாடலும் நெருக்கமும் குறைந்து, நாளடைவில் உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்தார்.

திரைத்துறையுடன் குடும்ப வாழ்க்கை

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், திருமணத்துக்குப் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர், திரைத்துறையுடன் குடும்ப வாழ்க்கையையும் கவனித்து வருகிறார்.

காஜல் அகர்வால் கருத்து

இந்த நிலையில், சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடு குறித்து காஜல் அகர்வால் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்து வருவதாகவும், குறிப்பாக தம்பதிகளுக்கிடையே பொறுமை இல்லாத நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

தம்பதிகள் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தும்போதுகூட ஒருவரை ஒருவர் கவனிக்காமல், பேசிக்கொள்ளாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையேயான உரையாடலும் நெருக்கமும் குறைந்து, நாளடைவில் உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், செல்போன்களின் பயன்பாடு தம்பதிகளின் உறவில் ஏற்படுத்தும் தாக்கத்தை அனைவரும் உணர்ந்து, அதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வாரத்தில் ஒரு நாள் செல்போனுக்கு ஓய்வு

தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய காஜல் அகர்வால், “வாரத்தில் ஒரு நாள் செல்போனுக்கு ஓய்வு கொடுத்து, நானும் என் கணவரும் வெளியே சென்று நேரத்தை செலவிடுகிறோம். மனம் விட்டு பேசி மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com