இரண்டு நாட்களில் “பல்டி” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ஷேன் நிகாம், சாந்தனு நடித்துள்ள ‘பல்டி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
ஷேன் நிகாம் தன் 25-வது படமான ‘பல்டி’ படத்தில் நடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் கடந்த 26 ம் தேதி வெளியானது. முதல் பாடலான ஜாலக்காரி வீடியோ பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலை விநாயக் சசிகுமார் வரிகளில் சாய் அபயங்கர் மற்றும் சுபலாஷினி இணைந்து பாடியுள்ளனர். பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘பல்டி’ படம் இரண்டு நாட்களில் ரூ. 3.2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






