"பறந்து போ" படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

"பறந்து போ" படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
"பறந்து போ" படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பறந்து போ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com