

பாய்ஸ், செல்லமே, எம் மகன், வெயில் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் பரத். இவர் நடிப்பில் கடந்த 3ஆம் தேதி ‘காளிதாஸ் 2’ படம் வெளியானது.
கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அந்தப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.
இதை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பின் பெரிதும் எதிர்பார்ப்புடன் ‘காளிதாஸ் 2’ வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்க, பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்ணதி ஆகியோர் பரத் உடன் இணைந்து நடித்திருந்தனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடித்துள்ளார்.
முதல் பாகம் போலவே இப்படமும் மாபெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.