விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் பிரபு, அனிஷ்மா நடித்துள்ள ‘சிறை’ படம் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபுவின் “சிறை” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த டாணாக்காரன் படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிறை என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனிஷ்மா நடித்திருக்கிறார்.வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அனிஷ்மா அணில்குமார் இப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், சிறை படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com