மதுரை என்றாலே ரவுடியா? - “வதந்தி 2” நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேச்சு

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடர் ஆகஸ்ட் 7 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மதுரை என்றாலே ரவுடியா? -  “வதந்தி 2” நிகழ்வில் நடிகர் சசிகுமார் பேச்சு
Published on

‘வதந்தி 2’ வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் விழாவில் மதுரையைச் சார்ந்த கதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் தங்களை ரவுடிகளாக மட்டுமே காட்டுவதாக நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் ‘வதந்தி’. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புஷ்கர் காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு சைமன் இசையமைத்தார்.

‘வதந்தி’ வெப் தொடரின் 2ம் பாகம்

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வதந்தி’ வெப் தொடரின் 2ம் பாகம் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கி உள்ளார்.

‘வதந்தி 2’ வெப் தொடரின் பர்ஸ்ட் லுக்

சமீபத்தில் ‘வதந்தி 2’ வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது. யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘வதந்தி 2’ வெப் தொடரின் டிரெய்லர்

‘வதந்தி 2’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் சசிகுமார் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். இந்த ‘வதந்தி 2’ வெப் தொடரை, வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். எட்டு எபிசோட்கள் கொண்ட ‘வதந்தி 2’ வெப் தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வதந்தி 2’ வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் விழாவில் மதுரையைச் சார்ந்த கதைகள் என்றாலே தமிழ் சினிமாவில் தங்களை ரவுடிகளாக மட்டுமே காட்டுவதாக நடிகர் சசிகுமார் கூறியுள்ளார்.

‘வதந்தி 2’ வெப் தொடரின் நிகழ்வில் நடிகர் சசிகுமார் “நான் சுமார் 30 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், என்னை யாரும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு இதுவரை யோசிக்கவே இல்லை. முதன்முதலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், மதுரையைச் சார்ந்த கதையென்றாலே எங்களை ரவுடிகளாகத்தான் திரையில் காட்டுவார்கள். போலீஸ் கதாபாத்திரம் என்று சொன்ன பிறகுதான் கதையைக் கேட்க ஆரம்பித்தேன். கதை பிடித்துவிட்டது” என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com