‘என் கணவர் பெண்களை தொட்டு பேசுகிறாரா?'- நடிகர் புகழின் மனைவி ஆவேசம்

எனது கணவர் புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுதான் அதிகம் வருகிறது என்று பென்சி கூறியுள்ளார்.
சென்னை,
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் தாவியுள்ள புகழ் படங்கள் நடித்து வருகிறார். இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி பென்சியுடன் அவர் கலந்துகொண்டார்.
அதில் பென்சி பேசும்போது, ‘‘எனது கணவர் புகழ் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுதான் அதிகம் வருகிறது. நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இதில் பிரச்சினை என்பது யாருக்கு என்றால் எனக்கும், சம்பந்தப்பட்ட அந்த பெண்ணுக்கும் தான். எனது கணவர் பற்றி எனக்கு தெரியும். தவறான நோக்கத்துடன் பழகும் எந்த ஒரு ஆணிடமும் ஒரு பெண் பழக மாட்டாள்.
பழகிய அத்தனை பெண்களும் இப்போது வரை என் கணவருடன் நட்பாகத்தான் உள்ளனர். ஆணின் குணம் எப்படி உள்ளது? என்பதே முக்கியம்'', என்று ஆவேசமாக பேசினார். பென்சியின் இந்த கருத்து வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






