படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் - அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன் பதிவு

அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள் - அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன் பதிவு
Published on

சென்னை,

'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் சேரன், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், "அமீர்... மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும்.. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்.

ஞானவேல் ராஜா படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையையும், நாணயத்தையும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்கள் தவறை இந்நேரம் கண்டித்திருக்கவேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com