’தமன்னாவோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை’ - ’துரந்தர்’ பட நடிகை

தான் இப்போதுதான் சினிமாத்துறைக்கு வந்திருப்பதாக அவர் கூறினார்.
’தமன்னாவோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை’ -  ’துரந்தர்’ பட நடிகை
Published on

சென்னை,

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய துரந்தர் திரைப்படம் தற்போது ஓடிடியில் மக்களை கவர்ந்து வருகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் சாரா அர்ஜுன் மற்றும் அக்‌சய் கன்னா மிகவும் பிரபலமானார்கள்.

மேலும், இதில் ’ஷராரத்’ என்ற சிறப்புப் பாடலில் நடித்த கதாநாயகி ஆயிஷா கானுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் அவரது நடன அசைவுகள் பார்வையாளர்களை ஈர்த்தது. இதன் காரணமாக, அவரை நோரா பதேஹி மற்றும் தமன்னா போன்றவர்களுடன் ரசிகர்கள் ஒப்பிட்டனர்.

சமீபத்தில், இருவருடனும் ஒப்பிடப்பட்டதற்கு ஆயிஷா கான் பதிலளித்தார். அவர்களுடன் ஒப்பிடுவது தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார். அவர் பேசுகையில்,

Also Read
‘அந்த படத்தில் நான் நடிக்கவில்லை’.. நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்
’தமன்னாவோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை’ -  ’துரந்தர்’ பட நடிகை

இருவரும் அற்புதமான நடிகைகள். நோராவின் நடிப்பையும் ஆற்றலையும் பார்க்கும்போது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். தமன்னா நீண்ட காலமாக சினிமா துறையில் இருக்கிறார். ‘ஆஜ் கி ராத்’ பாடலில் அவரைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். நான் இப்போதுதான் சினிமா துறைக்கு வந்திருக்கிறேன். இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது’ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com