வெற்றிக்காக எல்லை மீறக்கூடாது.. நடிகைகளுக்கு நித்யா மேனன் அட்வைஸ்

எனக்கு புகழை விட தன்மானமே முக்கியம் என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்காக எல்லை மீறக்கூடாது.. நடிகைகளுக்கு நித்யா மேனன் அட்வைஸ்
Published on

8 வயதில், 'ஹனுமான்' என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை நித்யா மேனன். பெங்களூரில் பிறந்த நித்யா மேனன், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார். கவர்ச்சி கதாப்பாத்திரங்கள் இன்றி தனக்கென தனி பாணியில் நல்ல கதைகளை தேர்வு செய்து நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகைகளுக்கு சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். நித்யா மேனன் கூறியிருப்பதாவது: சினிமாவில் பெண்கள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் நிலவுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக எல்லை மீறும் காட்சிகளை தவிர்க்க, நடிகைகளே துணிச்சலுடன் மறுக்க வேண்டும். புகழை விட தன்மானமே முக்கியம். நடிகைகள் ஆரம்பத்திலிருந்தே தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும் நான் சில வகையான படங்களில் நடிக்காததால், எனக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தவறவிடுகிறேனா என்றால் ஆமாம் தான். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் புகழை விட நான் தன்மானத்தை தான் தேர்ந்தெடுக்கிறேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com