நாளைக்கு வாக்களிக்க யாரும் மறந்துடாதீங்க..அப்புறம்- நடிகை வரலட்சுமி

உங்க அதிகாரத்தை பயன்படுத்துங்கள்... வாக்களிக்க மறக்காதீங்க என்று நடிகை வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.
நாளைக்கு வாக்களிக்க யாரும்  மறந்துடாதீங்க..அப்புறம்- நடிகை வரலட்சுமி
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. தேர்தலில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பலரும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை வரலட்சுமி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“ரோடு சரியில்லை, வீட்ல கரண்ட் இல்லை, தண்ணி வரலன்னு ஆயிரத்தெட்டு குறை கண்டுபிடிக்கிறோம்ல... ஆனால் இதோட பதில் எல்லாமே நம்ம கிட்டதான் இருக்கு. நாளைக்கு ஒருநாள் நம்ம கிட்ட இருக்க ஒரே ஆயுதம்.. இந்த ஒரு விரல். மறக்காம நாளைக்கு ஓட்டு போடுங்க. அதுக்கப்புறம் 5 வருஷத்திற்கு யாரும் எந்த கேள்வியும் கேக்காதீங்க... ஏனென்றால் யாரும் பதிலும் சொல்ல மாட்டாங்க. உங்க அதிகாரத்தை பயன்படுத்துங்கள்... வாக்களிக்க மறக்காதீங்க... பொறுப்புடன் இருங்கள்... தமிழ்நாடு தேர்தலில் வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com