நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் - இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்

லியோ ஜான் பால் இயக்கிய ‘மார்கன்’ திரைப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் - இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு விஜய் ஆண்டனி அட்வைஸ்
Published on

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு மார்கன் என்று பெரியடப்பட்டுள்ளது.

கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் ஆண்டனி இயக்குனர் லியோ ஜான்பாலுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதாவது, "நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். நான் நடிகனானதும் இசையமைப்பதை விட்டுவிட்டேன். தற்போது மீண்டும் இசையமைக்க உள்ளேன். நீங்களும் உங்களின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தை எடிட் செய்வதை விட்டு விடாதீர்கள். நீங்கள் ஒரு அற்புதமான எடிட்டர்!" என்று லியோ ஜான்பாலுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

X

Daily Thanthi
www.dailythanthi.com