"லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்”.. முதல்-அமைச்சர் விஜய் பேச்சை குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமசாமி பதிவு

லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
"லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்”.. முதல்-அமைச்சர் விஜய் பேச்சை குறிப்பிட்டு இயக்குநர் சீனு ராமசாமி பதிவு
Published on

சென்னை,

இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி, நேற்று தமிழக முதல்-அமைச்சர் விஜய் பேசியதை குறிப்பிட்டு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“லஞ்சம் கொடுக்காதே நான் இருக்கிறேன்.”

எளியோர்களின் பெருமூச்சையும் நம்பிக்கையையும் தட்டி எழுப்புகிறது முதல்-அமைச்சரின் இந்த வாக்கு.

ஒரு அதிகாரம் தன் குடிமக்களுக்குத் தரும் மிகச்சிறந்த பாதுகாப்பு இதுதான்.

ஆனால், இந்த வெளிச்சம் நிலைக்க வேண்டுமானால் நாமும் மாற வேண்டும்.

லஞ்சம் என்பது நம் சமூகத்தின் நோய். கொடுப்பதும் வாங்குவதும் ஒன்றுதான்.

இதை உணர்ந்தாலே நேர்மையான பாதை தெளிந்துவிடும்.

ஒளி பிறக்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com