‘துரந்தர் 2’: பாக்ஸ் ஆபிஸில் புயல்.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூலில் சாதனை படைத்தும் வருகிறது.
‘துரந்தர் 2’: பாக்ஸ் ஆபிஸில் புயல்.. 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Published on

சென்னை,

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. 3 மணி 49 நிமிடம் கொண்ட இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூலில் சாதனை படைத்தும் வருகிறது.

இந்த நிலையில், வெளியான நான்கு நாட்களிலேயே, இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ.550 கோடியும், வெளிநாடுகளில் ரூ.211 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய வசூல் சுமார் ரூ.761 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வேகமாக முன்னேறும் இந்த படம், அடுத்த சில நாட்களில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com