பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதா? நடிகை டாப்சி வருத்தம்

பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக நடிகை டாப்சி வருத்தமாக கூறியுள்ளார்.
பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதா? நடிகை டாப்சி வருத்தம்
Published on

சென்னை,

'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் டாப்சி, சமீபத்தில் வெளியான 'தக் தக்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவம் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், "சினிமாவை நட்சத்திர அந்தஸ்து சுற்றி வருகிறது. முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஓ.டி.டி. தளங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. இது வருத்தம் அளிக்கிறது.

பெரிய நடிகர்கள் இல்லாத படங்களை தோல்வி படம் என்று முத்திரை குத்தி, ஓ.டி.டி.யில் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியம் காட்டுகிறார்கள். நான் ஒரு படத்தை தேர்வு செய்யும்போது, உடன் நடிக்கும் நடிகர்களின் தகுதியை பார்ப்பது கிடையாது.

பல அறிமுக டைரக்டர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் மற்றவர்களின் பார்வை இப்படி இருக்குமா? என்பதை சொல்ல முடியாது. பெரிய நடிகர்கள் இல்லாத சிறிய படங்களை ஓ.டி.டி.க்கு நகர்த்த பார்க்கிறார்கள். இப்படி செய்தால் சினிமாவில் பிளவுதான் ஏற்படும்.

பெரிய நடிகர்களின் படங்கள் சிறிய படங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலைமை மாற வேண்டும்''என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com