சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றலாம்- ஆர்த்தியின் பதிவால் பரபரப்பு

ரவிமோகன் தனது 2 மகன்களை சந்தித்து பேசியது குறித்துதான் ஆர்த்தி இப்படி பதிவிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
சென்னை,
தன்னை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் சூழ்ந்திருக்கும்போது, சினிமாவில் படுபிசியாக இயங்கி கொண்டிருக்கிறார், ரவிமோகன். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்து வருகிறார். 'கராத்தே பாபு', 'ஜீனி' போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பாளராக மாறியிருக்கும் ரவி மோகன், விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்கப்போகிறார். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கும் ரவி மோகன், தனது மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில் தனது மூத்த மகன் ஆரவின் பிறந்தநாளையொட்டி, மகன்கள் ஆரவ், அயான் ஆகிய இருவரையும் அவர் சந்தித்து பேசி மகிழ்ந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதற்கிடையில் ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது. அவர், 'ஜாக்கிரதை. சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றலாம்', என்று குறிப்பிட்டுள்ளார். ரவிமோகன் தனது 2 மகன்களை சந்தித்து பேசியது குறித்துதான் ஆர்த்தி இப்படி பதிவிட்டுள்ளதாக பேசப்படுகிறது.






