

சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.