“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியானது

மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ம் தேதி வெளியாகிறது.
“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியானது
Published on: 

மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மிதுன் மாணிக்கம் . சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘பேமிலி பாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மிதுன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜே. பி. நிர்மல் இசையமைத்திருக்கிறார். பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிச்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியானது

இந்நிலையில், மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘சிலப்பதிகாரத்துல தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…’ என்ற அழுத்தமான வசனத்துடன் இந்த டீசர் தொடங்குகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நிஜமாகவே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைக்கதை மிகவும் சஸ்பென்ஸாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மிகவும் பிரியமான, காணாமல் போன ஒரு முக்கியப் பொருளைத் தேடி, கதையின் நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் அதிரடிப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களையும், அவன் எதிர்கொள்ளும் எதிர்பாராத ஆபத்தான திருப்பங்களையும் இந்த டீசர் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com