கங்குவா படத்தில் இணைந்த பிரபல நடிகர்... உதிரனை அறிமுகப்படுத்திய படக்குழு

3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கங்குவா படத்தில் இணைந்த பிரபல நடிகர்... உதிரனை அறிமுகப்படுத்திய படக்குழு
Published on

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தில் 'உதிரன்' என்ற கதாபாத்திரத்தை படக்குழு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க உள்ளார். பாபி தியோலின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டு உள்ளது.

அந்த பதிவில், 'இரக்கமற்ற, சக்தி வாய்ந்த, மறக்க முடியாத எங்கள் உதிரன் பாபி தியோலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று படக்குழு பதிவிட்டு உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாபி தியோல் சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com