விராட் கோலிக்கு நன்றி கூறிய பிரபல பாடகர் - காரணம் என்ன?


Famous singer thanks Virat Kohli - what is the reason?
x

பாடகர் ராகுல் வைத்யா, கோலிக்கு நன்றி தெரிவித்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இருக்கிறார்.

சென்னை,

பிரபல பாடகர் ராகுல் வைத்யா, தன்னை இன்ஸ்டாகிராமில் அன்பிளாக் செய்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ராகுல் வைத்யா முன்னதாக கோலி மற்றும் அவரது ரசிகர்களை "ஜோக்கர்" என்று கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து அவரை விராட் சமூக வலைதளத்தில் பிளாக் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் வைத்யா, கோலிக்கு நன்றி தெரிவித்து இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பைப் பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

"என்னை அன்பிளாக் செய்ததற்கு நன்றி விராட், கிரிக்கெட் இதுவரை கண்டிராத சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் இந்தியாவின் பெருமை ! ஜெய் ஹிந்த். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story