

சென்னை,
'பைரவா' படம் புத்தாண்டு கொண்டாட்டமாக மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2017-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ஒரு அதிரடி திரைப்படம் பைரவா . பரதன் இயக்கிய இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி தயாரித்திருந்தனர். இப்படத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மேலும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா மற்றும் அபர்ணா வினோத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
ஆக்ஷன் கதைக்களத்தில் ரூ.60 கோடியில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசி கர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. ரூ.112 கோடி வசூலும் குவித்தது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
அந்த வகையில் அடுத்தாண்டு (2027) ஜனவரி 1-ந்தேதி 'பைரவா' படம் மீண்டும் ரிலீசுக்கு வருகிறது. இந்தப் படத்தை சிம் சினி இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. ஏராளமான தியேட்டர்களில் இப்படம் புத்தாண்டு வெளியீடாக திரையிடப்படுகிறது.
விஜய் தற்போது முதல்-அமைச்சராகி இருக்கும் நிலையில் அவரது 'ஜனநாயகன்' படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 'ஹிட்' அடித்தது. தற்போது அவர் நடித்த 'பைரவா' படம் புத்தாண்டு கொண்டாட்டமாக மீண்டும் ரிலீசுக்கு வரவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.