'அங்கீகாரம்' படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்த படக்குழு

ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர் நடிக்கும் ‘அங்கீகாரம்’ படம் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது.
'அங்கீகாரம்' படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்த படக்குழு
Published on

சென்னை,

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அங்கீகாரம்'. இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜே.பி. தென்பாதியான், தடகள வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் 'அறம்', 'அயலான்' உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜூன் 26-ல் திரையரங்குகளில் வெளியீடு

சமீபத்தில் வெளியான 'அங்கீகாரம்' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம் வருகிற ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வைரலாகும் பிடிஎஸ் வீடியோ

இந்த நிலையில், 'அங்கீகாரம்' படத்தின் பின்னணிக் காட்சிகள் (பிடிஎஸ்) அடங்கிய சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள், படத்தை உருவாக்கிய விதம், தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு மற்றும் படப்பிடிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பிடிஎஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com