பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகரர் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவ்வப்போது ஆஜராகி வருகிறார். அதேபோல், இவர் பல்வேறு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பையின் பளி ஹில் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 15வது தளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாக்குலின் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் 14வது தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பற்றி எரிந்த தீயை சுமார் 1 மணிநேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் நடிகை ஜாக்குலின் வசிக்கும் 15வது தளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com